Posts

புது கவிதையின் தோற்றம் வளர்ச்சி:

புது கவிதையின் தோற்றம் வளர்ச்சி : முன்னுரை : காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது . மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும் . பழந்தமிழர்கள் வெண்பா , ஆசிரியம் , வஞ்சி , கலி , பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர் . இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது 1)பாரதியார் : சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர் . இந்திய சுதந்திர போராட்ட காலத்தில்   கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர் . இவர்   ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர் , பத்திரிக்கையாசிரியர் , சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் . தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர் , “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் ” என்று போற்றி...