புது கவிதையின் தோற்றம் வளர்ச்சி:
புது கவிதையின் தோற்றம் வளர்ச்சி:
முன்னுரை:
காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது
1)பாரதியார்:
சுப்ரமணிய
பாரதியார் ஒரு தமிழ் கவிஞர்.
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர்
கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில்
விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல்
ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும்
தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம்
தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி
மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி
பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய
தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை
ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட
மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை
வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக்
காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு:
சுப்ரமணிய பாரதியார்
அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி
அம்மாளுக்கும் மகனாக
1882 ஆம் ஆண்டு
தமிழ்நாட்டின் திருநெல்வேலி
மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில்
பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட
பெயர் சுப்பிரமணியன்.
அவருடைய 5 வயதில்
அவருடைய தாயார்
காலமானார். இவர்
இளம் வயதிலேயே
தமிழில் புலமைப்பெற்றுத்
திகழ்ந்தார்
2) பாரதிதாசன்:
பாரதிதாசன் (ஏப்ரல் 29,
1891 - ஏப்ரல் 21,
1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்
பிறப்பு: கனக. சுப்புரத்தினம்,ஏப்ரல் 29,
1891,புதுவை
இறப்பு: ஏப்ரல் 21,
1964 (அகவை 72), சென்னை
புனைப்பெயர்: பாரதிதாசன்
தொழில்: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
நாடு: இந்தியா
கல்வி: புலவர்
இலக்கிய வகை: தமிழிலக்கியம் - கவிதை, நாடகம், கட்டுரை, கதை
கருப்பொருட்கள் இனமானம், அரசியல்
இயக்கம்: திராவிட இயக்கம்
துணைவர்(கள்):
பழநி அம்மையார்
பிள்ளைகள்: கோபதி,சரசுவதி, வசந்தா,இரமணி
கவிதை:
அச்சம்
(காதலன் தன் காதலியைத் தேடிச் செல்கிறான்.)
காதலன்
அன்பு மெல்லியல், அழகியோள் எங்கே?
பெருவாய் வாட்பல் அரிமாத் தின்றதோ!
கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச
வஞ்சக் கள்வன் மாய்த்திட் டானோ!
(தேடிச் செல்லுகின்றான். பல புறங்களிலும்
அவன் பார்வை சுழல்கின்றது.)
அவன் பார்வை சுழல்கின்றது.)
3)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல்
13, 1930 - அக்டோபர்
8, 1959)
ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை
வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை
ஆக்கப்பட்டுள்ளன.
பிறப்பு: அ.கல்யாணசுந்தரம்,ஏப்ரல்
13, 1930,செங்கப்படுத்தான்காடு
இறப்பு: அக்டோபர் 8, 1959 (அகவை
29)
தொழில்: பல தொழில்கள்
கட்டுரையைப் பார்க்க
எழுதிய காலம்: 1955-1959
துணைவர்(கள்): கௌரவம்மாள்
பிள்ளைகள்: க.குமரவேலு
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி:
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி.
4)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை:
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27,
1876 - செப்டம்பர் 26,
1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்
பிறப்பு: ஜூலை 27,
1876 தேரூர், கன்னியாக்குமரி மாவட்டம்
இறப்பு: செப்டம்பர் 26,
1954 (அகவை 78)
அறியப்படுவது: கவிஞர்
பட்டம்: கவிமணி
பெற்றோர்: சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
வாழ்க்கைத் துணை: உமையம்மை.
கவிதை:
ஈயும் எனக்குத் தோழன் – ஊரும்
எறும்பும் எனக்கு நேசன்;
நாயும் எனக்குத் தோழன் – குள்ள
நரியும் எனக்கு நண்பன்.
5) நாமக்கல் கவிஞர்:
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19,
1888 - ஆகஸ்ட் 24,
1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்
பிறப்பு:வெ. இராமலிங்கம் அக்டோபர் 19,
1888 மோகனூர், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு:ஆகத்து 24,
1972 (அகவை 83)
தேசியம்: இந்தியர்,
மற்ற பெயர்கள்:காந்தியக் கவிஞர்
அறியப்படுவது: கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள்: மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன.
6) கண்ணதாசன்:
கண்ணதாசன் (ஜூன் 24
1927 – அக்டோபர் 17
1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்
பிறப்பு: முத்தையா,சூன் 24,
1927,சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: அக்டோபர் 17,
1981 (அகவை 54),சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர்: காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில்: கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
எழுதிய காலம்: 1944-1981
குறிப்பிடத்தக்க விருது
(கள்): சிறந்த வசனத்திற்கான தேசிய விருது 1961 குழந்தைக்காக
பிள்ளைகள்: 15
கவிதை:
கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே
7) கவிஞர் ந. பிச்சமூர்த்தி:
ந. பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை:
கும்பகோணத்தில் வாழ்ந்த
நடேச தீக்ஷிதர்
- காமாட்சியம்மாள் தம்பதியருக்கு
நான்காவது குழந்தையாகப்
பிச்சமூர்த்தி பிறந்தார்.
அவருக்குப் பெற்றோர்
இட்ட பெயர்
வேங்கட மகாலிங்கம்.
நடேச தீக்ஷிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில்
ஹரிகதா சொற்பொழிவு
செய்யுமளவிற்குத் தேர்ச்சி
பெற்றவர். சைவப்
புராணப் பிரசங்கங்கள்
செய்தவர்.
பிச்சமூர்த்தி
கும்பகோணத்தில் தன்
பள்ளிப் படிப்பையும்
கல்லூரிப் படிப்பையும்
முடித்தார். தத்துவத்தில்
பட்டம் பெற்று,
சென்னை சட்டக்
கல்லூரியில் பட்டம்
பெற்றார். 1925 முதல்
1938 வரை வழக்கறிஞராகப்
பணிபுரிந்தார். 1939 முதல்
1959 வரை இந்து
அறநிலையத்துறை அதிகாரியாகப்
பணிபுரிந்தார்.
கவிதை:
"வானெங்கும் எஃகிறக
தெருவெங்கும் பிணமல
பீரங்கிக் குரல்பேசக
கேட்டதொரு வேறுகுரல
அன்பும் அஹிம்ஸையும்
விற்றுவந்தேன் ஆதிமுதல
பூக்காரி பூவைப்போலக
கண்ணெடுப்பார் யாருமில்ல
எஃகிறகின் உயரம
தெய்வக்குரல் ஏறவில்லை"
8) கவிஞர் மீரா:
தமிழ்க் கவிஞர்களுள் பாரதியைப்போல் சமூகப் போராளிகளாகவும் திகழ்ந்தவர்கள் மிகச் சிலர். அவர்களுள் ஒருவர் கவிஞர் மீரா. நடையில் எளிமை, கருத்தில் வலிமை, தமிழ்க் கவிதை மரபில் பழுத்த புலமை, சொல்லுக்குச் சொல் புதுமை, அங்கதம் என்னும் குறும்பு குதிக்கும் தமிழ்நடை, ஆனால் எவரையும் புண்படுத்தாத பண்பாட்டு வரையறை! ஒருவகையில் ஈழத்து மஹாகவியுடன் மீராவை ஒப்பிடலாம். ஆனால் மீரா சிலவகைகளில் வேறுபட்டுத் தனித்து நிற்கிறார்.
படைப்புகள்:
மீ. ராசேந்திரன் என்ற பெயர் கவிதைக்காக மீரா ஆனது. இராசேந்திரன் கவிதைகள்
(1965), மூன்றும் ஆறும்
(1967), கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
(1971), ஊசிகள்
(1974), கோடையும் வசந்தமும்
(2002), குக்கூ
(2002) ஆகியவை இவரது கவிதை நூல்கள். பல உரைநடை நூல்களும் படைத்துள்ளார். குறிப்பிடத்தக்கது வா இந்தப் பக்கம்.
சுயநல அரசியல்:
பணத்துக்காக, பதவிகளுக்காகக் கட்சிவிட்டுக் கட்சி மாறினர் கீழ்த்தர அரசியல்வாதிகள். இவர்களால் பொதுவாழ்க்கை தரம் தாழ்ந்து போனது. இதைக் குத்திக் காட்டும் ‘வேகம்’ - ஒரு தரமான எள்ளல் கவிதை.
எங்கள் ஊர் எம்.எல்.ஏ
ஏழு மாதத்தில்
எட்டுத் தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம்?
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்.....
என்ன தேசம்
இந்தத் தேசம்? (ஊசிகள், பக்கம், 13)
9) கவிஞர் கவிக்கோ.அப்துல் ரகுமான்:
அப்துல் ரகுமான், (பிறப்பு: நவம்பர் 9,
1937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
பிறப்பு:
அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
கவிதை:
பித்தன்
பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்
குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து
புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்
அவன் மேலும் சொன்னான்…
10) கவிஞர் மு.மேத்தா:
மு. மேத்தா (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5,
1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார். உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த
"தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி"
என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள்
"ஊர்வலம்"
தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது
"சோழ நிலா"
என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.
"நான்
வெட்ட வெட்டத் தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை"
போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.
"வானம்பாடி"
என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.
11) கவிஞர் வைரமுத்து:
பிறப்பு வைரமுத்து சூலை 13,
1953 (அகவை 63) வடுகபட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா தொழில் கவிஞர் பாடலாசிரியர் குறிப்பிடத்தக்க விருது(கள்) சிறந்த பாடலாசிரியருக்கான குடியரசுத் தலைவர் விருதை 6 முறை
(1985),(1993),(1994),(1999),(2002),(2010) பெற்ற பெருமைக்குரியவர், பத்ம ஸ்ரீ பிள்ளைகள் மதன் கார்க்கி கபிலன் வைரமுத்து
(Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980)
எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு:
தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980ல்
"நிழல்கள்"
திரைப்படத்தில்
"இது ஒரு பொன்மாலைப் பொழுது.."
எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.
கவிதை:
சிரிப்பு
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது
வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு
எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு
உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்
சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு
சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது
ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது
சிரித்துச் சிந்தும் கண்ணீரில் உப்புச் சுவை தெரிவதில்லை
12) கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்:
சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.
பிறப்பு:
பொ.பாலசுப்பிரமணியம்
சூலை 29, 1936
ஆத்துப் பொள்ளாச்சி, பொள்ளாச்சி, கோவை மாவட்டம்
கல்வி:
முனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம்,
1987)
முதுகலை, தமிழ் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1956)
இடைநிலை (திருச்சி ஜமால் முகமது கல்லூரி,
1953)
பள்ளி (தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப்பள்ளி, பாலக்காடு,
1951)
பணி:
கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர், பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாளர், சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளர்
பெற்றோர்:
கி. பொன்னுசாமி, கண்டியம்மாள்
It is real
ReplyDeleteTamil
ReplyDelete